shadow

ndtvடெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா குறித்து தயாரிக்கப்பட்ட ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை பிபிசி தொலைக்காட்சி நேற்று மகளிர் தினத்தில் உலகம் முழுவதும் ஒளிபரப்ப திட்டமிட்டுருந்தது.

ஆனால் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்திய அரசு தடை விதித்த காரணத்தால் நேற்று அதிகாரபூர்வமாக பிபிசியில் ஒளிபரப்ப வேண்டிய இந்த படம் ஒளிபரப்பப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான என்.டி.டி.வி இந்த படத்தின் டைட்டிலை மட்டும் ஒரு மணி நேரத்திற்கு ஒளிபரப்பி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பின்னணியில் ஒரு அகல்விளக்கு மட்டும் எரியும் புகைப்படமும் இந்த படத்தின் டைட்டிலும் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு ஒளிபரப்பி என்.டி.டி.வி தனது எதிர்ப்பை இந்திய அரசுக்கு நூதனமாக தெரிவித்துள்ளது.

இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்தியாவில் மட்டுமே தடை இருக்கின்றது என்பதால் மற்ற நாடுகளில் திட்டமிட்டபடி இந்த படம் ஒளிபரப்பாகியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.  அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தின் பரூச் கல்லூரியில் இந்த ஆவணப்படம் இன்று திரையிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply