நேரம், நய்யாண்டி, ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த நடிகை நஸ்ரியாவுக்கும் மலையாள இயக்குனரர் மகனும், நடிகருமான பஹத் பாசிலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாசில், நஸ்ரியாவுக்கும் தனது மகனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், இருவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்ய இருவீட்டார்களும் இணைந்து முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது பெற்றோர்களால நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

தற்போது மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் L For Love என்ற படத்தில் பஹத் பாசில் நடித்து வருகிறார். நஸ்ரியாவும், திருமணம் என்னும் நிக்காஹ் மற்றும் சலலா மொபைல்ஸ்  போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த வனிதா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக விழாவிற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply