shadow

Nazriya Nazim - Fahad Fazil Marriage Photos engagament ceremonyஜெய் மற்றும் நஸ்ரியா முதல்முறையாக ஜோடி சேரும் திருமணம் என்னும் நிக்காஹ் என்னும் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் அனீஸ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மே 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் கதை குறித்து தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.  “ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி திருமணம். இந்த படத்தில் நஸ்ரியாவும் ஜெய்யும் காதலர்கள். இந்நிலையில் நஸ்ரியாவின் திருமண தினத்தன்று ஏற்படும் ஒரு சிக்கலை எப்படி திருமண வீட்டார்கள் சமாளிக்கின்றனர் என்பதுதான் கதை.

இந்துக்களிலும் சரி, முஸ்லீம்களிலும் சரி திருமண நிகழ்ச்சியை ஒரு திருவிழா போல கொண்டாடுவார்கள். அந்த திருமண நிகழ்ச்சியில் ஏற்படும் ஒரு சிக்கலை இந்து மற்றும் முஸ்லீம் பெரியவர்கள் எப்படி தீர்க்கின்றனர் என்பதுதான் கதை

நஸ்ரியாவின் உண்மையான திருமணம் பகத் பாசிலுடன் விரைவில் நடக்கவுள்ள நிலையில், நஸ்ரியாவின் திருமணம் நிற்பதுமாதிரியான ஒரு படத்தில் நஸ்ரியா நடித்திருப்பது பகத் பாசிலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply