12நடிகர் நாசரின் மகன் நேற்று முன் தினம் கார் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் இன்னும் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். அபாய கட்டத்தை தாண்டிவிட்ட போதிலும் இன்னும் பலத்த காயங்களுடன் அவரது மகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாசரின் குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே 24 நேரமும் தங்கியிருந்து பைசலின் சிகிச்சைக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் இன்று உத்தம வில்லனின் படப்பிடிப்பில் நாசர் கலந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

நாசரின் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் அவருடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை. படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளைக்கூட கமல்ஹாசன் தெரிவிக்கவில்லை. ஆனால் கடமையில் தவறாக நாசர் மிகச்சரியாக படப்பிடிப்புக்கு வந்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தினார்.

இந்த தொழில்பக்திக்கு தான் தலைவணங்குவதாக நாசரிடம் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் கூறியதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நாசரின் மகன் விரைவில் குணமடைய உத்தம வில்லன் படக்குழுவினர் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வதாக நாசரிடம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *