shadow

நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா?

சமீபத்தில் இணையதளங்களில் வெளியான ‘லட்சுமி’ என்ற குறும்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவருக்கு தெரியாமல் இன்னொரு ஆணுடன் பழகும் நாயகி அவருடன் உறவு வைத்து கொண்டு பின் மீண்டும் கணவருடனே வாழும் சர்ச்சைக்குரிய கதை கொண்டது இந்த குறும்படம். இந்த குறும்படம் குறித்து இணையத்தில் பல நாட்கள் விவாதம் நடந்தது.

இந்த குறும்படத்தை இயக்கிய சார்ஜன் என்பவர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தை தயாரிக்கும் கேஜேஆர் நிறுவனம் ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது

‘அறம்’ மற்றும் ‘லட்சுமி’ போலவே இந்த படத்தின் திரைக்கதையும் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படம் என்றும் இந்த படத்தில் மேலும் சில முக்கிய பிரமுகர்கள் இணையவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply