நயன்தாரா நடிக்கும் அடுத்த பேய்ப்படம் ‘மாயா 2?
nayanthara-saree-still-from-greeku-veerudu-movie-1
தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான் என மூன்று சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்த நடிகை நயன்தாரா தற்போது ‘இது நம்ம ஆளு’ மற்றும் ‘திருநாள்’, ‘காஷ்மோரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் விக்ரமுடன் முதன்முதலாக ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ‘மாயா’ படம் சமீபத்தில் சூப்பர் ஹிட் ஆகியதால் மாயாவை போன்றே இன்னொரு பேய்ப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ‘களவாணி’, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் தயாரிக்க அவரது உதவியாளர் முருகதாஸ் இயக்குகிறார்.

மாயா படத்தை போன்றே இந்த படத்தின் திரைக்கதையும் அவரது கேரக்டரை மையமாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த படத்திற்கு ‘மாயா 2’ என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *