shadow

பாஜக பிரபலத்துடன் நயன்தாரா சந்திப்பு: கட்சியில் இணைகிறார் நயன்தாரா

நேற்று நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் தரிசனம் செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் திருச்செந்தூரில் அவர் முருகப்பெருமானை சுவாமி தரிசனம் செய்து அர்ச்சனைக்கு காத்திருந்தபோது அதே இடத்தில் பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் அவர்களும் பூஜைக்காக வந்திருந்தார்

இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு சில நிமிடங்கள் பேசியதாகவும் அப்போது நயன்தாராவை நரசிம்மன் அவர்கள் தங்களது காட்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது

இதற்கு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலளித்த நயன்தாரா ’காலம் வரும் போது பார்க்கலாம்’ என்று கூறினாராம். கடந்த சில நாட்களாகவே நடிப்பைத் தாண்டி அவர் சமூகக் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில்கூட தெலுங்கானாவில் நடந்த என்கவுண்டர் குறித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் நடித்த அறம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் அவர் அரசியலுக்கு வருவது போன்றே இருந்தது

எனவே நடிப்புக்கு முழுக்கு போட்ட பின்னர் அவர் அரசியலில் ஈடுபடலாம் என்றும் ஜெயலலிதா போல் ஆக வேண்டுமென்று அவரது மனதில் ஆசை இருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன

இருப்பினும் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா? பாஜகவில் இணைவாரா? போன்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *