நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தாலும் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை அவரே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வாவை கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், மேலும் ஒரு பிரபல நடிகர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதர்வா நாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஏற்கனவே நயன்தாரா நடித்து வரும் நிலையில் மீண்டும் இருவரும் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர்.

இருப்பினும் அதர்வா, நயன்தாரா ஜோடியாக நடிக்கவில்லை என்பதும் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *