தல அஜித்துடன் மீண்டும் இணைந்தார் நயன்தாரா

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ திரைப்படத்தின் நாயகி உறுதியாகிவிட்டது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். ஏற்கனவே ஏகன், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார்

பெரிய நடிகர்களுடன் இனி நடிப்பதில்லை, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக இருந்த நயன்தாரா, அஜித்துக்காக தனது கொள்கையை தளர்த்தி கொண்டு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்

அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவருடைய கேரக்டர் கிட்டத்தட்ட அஜித்துக்கு இணையான கேரக்டர் என்பதாலும் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான இன்னொரு காரணம் ஆகும்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *