சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா – த்ரிஷா

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் முதல்முறையாக நாயகியாக நயன்தாரா நடித்த நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் த்ரிஷா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் நயன்தாரா -த்ரிஷா இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை போடுவதற்கு முன்பே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *