shadow

ரஜினி, கமல், அஜித், மம்முட்டி ஹீரோயின் ஆகும் நயன்தாரா

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரே நேரத்தில் ரஜினி, கமல், அஜித், மம்முட்டி என நான்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படம், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம், அஜித்தின் ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் நயன்தாரா, தெலுங்கில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியாக நடிக்கவிருப்பவர் மம்முட்டி என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகையும் ஒரே நேரத்தில் நான்கு முன்னணி தென்னிந்திய முன்னணி நடிகர்களுடன் நடித்ததில்லை. இதுபோக தெலுங்கில் சிரஞ்சிவியுடன் உள்பட பல படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply