மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா

nayantharaசூர்யா நடித்து வரும் ‘சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 21ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் வரும் நவம்பர் 2 முதல் சூர்யா கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறவுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *