shadow

முதல்முறையாக தடகள வீராங்கனை கேரக்டரில் நயன்தாரா

கடந்த சில வருடங்களாகவே நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் மட்டுமே நடித்து வருவதால் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்டு வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வெளிவந்துள்ள ‘டோரா’, நடித்து கொண்டிருக்கும் ‘அறம்’, ‘கொலையுதிர்க்காலம்’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் தான்

இந்த நிலையில் அவர் தற்போது தடகள வீராங்கனையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெரியசாமி என்ற இயக்குனர் இயக்கவுள்ள இந்த படத்தில் தடகள வீராங்கனையாக நடிக்கவுள்ள நயன்தாரா தன்னுடைய கேரக்டர் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர் தடகள பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டில் நயன்தாரா நடித்த மூன்று படங்கள் தொடர்ந்து வெளியாகவிருப்பதால் இந்த ஆண்டு அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply