shadow

நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்: பாகிஸ்தான் தேர்தல் ரத்தாகுமா?

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிறையில் கவலைக்கிடமாக உள்ளார். அவரது உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார். இந்த நிலையில், சிறுநீரகக் கோளாறால் அவரது உடல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து வருவதாகவும். இதனால் அவர் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் பாகிஸ்தன் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply