shadow

பிரபல தயாரிப்பாளரை வாழ்த்து தெரிவிப்பது போல் திட்டிய இயக்குனர் நவீன்

மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் தற்போது ’அக்னி சிறகூகள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் சதீஷ்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

ஆனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படாமல் உள்ளதாகவும் சதீஷ்குமார் கால்சீட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் ஹர்பஜன்சிங் லாஸ்லியா நடிக்கும் ’பிரெண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார் இது குறித்து இயக்குனர் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது”

ஜே.சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் வஞ்சப் புகழ்ச்சியில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார் அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: இன்று படுபிசியான நடிகராக உருவெடுத்திருக்கும் ஜே.சதீஷ்குமார் எங்களுடைய ’அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பிற்கு தேதி கொடுக்க முடியாமல் தினமும் ஒரு ஷூட்டிங்கிற்கு பறந்துகொண்டிருக்கிறார். தயாரிப்பாளராக வெற்றிக்கொடி நாட்டிய தாங்கள் நடிகராக விஸ்வரூபமெடுப்பதில் மிக்க மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *