shadow

drinking-water

எப்படி தினமும் பயன்படுத்தும் வாகனங்களில் தூசிகள் மற்றும் அழுக்குகள் சேர்கிறதோ, அதேப்போல் உடலிலும் நச்சுக்கள் தினமும் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி உடலில் சேரும் நச்சுக்களை முறையாக வெளியேற்றிவிட்டால், உடலுறுப்புகள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இயங்கும். உடலில் நச்சுக்களை வெளியேற்ற கல்லீரல் மிகவும் உதவியாக இருக்கும். இது தான் உடலினுள் சேரும் நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றி, நாள்பட்ட நோய்களை தடுத்தல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், முதுமையைத் தடுத்தல், உணர்ச்சியை அதிகரித்தல், தெளிவாக சிந்திக்க வைத்தல் போன்ற செயல்களை செய்கிறது.

உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!!!

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற தினமும் ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். இங்கு உடலில் தங்கும் டாக்ஸின்களான நச்சுக்களை வெளியேற்ற பின்பற்ற வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

தண்ணீர் மிகவும் அவசியம்

உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்ற செய்ய வேண்டியவைகளில் முதலில் பரிந்துரைப்பது தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பது தான். ஏனெனில் உடலானது 65% நீரை உள்ளடக்கியுள்ளது. மேலும் உடலில் உள்ள பல்வேறு உறுப்புக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் முக்கியம். தண்ணீர் குடிப்பதன் மூலம், அது நச்சுக்களை வியர்வை மூலமாகவும், சிறுநீர் மற்றும் மலம் வழியாக டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். 

உலர்ந்த சருமத்தை

நீக்குதல் சருமத்தில் உள்ள சொரசொரப்புடன் இருக்கும் இறந்த சருமத்தை நீக்குவதன் மூலம் சருமத்தில் உள்ள நிணநீர் மண்டலம், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தூண்டும். எனவே குளிக்கும் முன், தலை முதல் கால் வரை மென்மையான ஸ்கரப்பர் கொண்டு தேய்த்து, பின் குளியுங்கள்.

தினமும் உடற்பயிற்சி

நிணநீர் மண்டலத்திற்கு, டாக்ஸின்களை வெளியேற்றும் சக்தி இல்லை. நிணநீர் மண்டலம் வியர்வையின் மூலம் டாக்ஸின்களை வெளியேற்ற வேண்டுமானால், அதற்கு தூண்டுதல் வேண்டும். அதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது ஜிம் சென்று செய்யும் உடற்பயிற்சியாகவோ அல்லது நடைப்பயிற்சி, ஜாக்கிங், வாக்கிங், நடனம் போன்றவற்றின் மூலமாகவோ இருக்கலாம். ஆனால் தவறாமல் தினமும் உடலுக்கு உடற்பயிற்சி அவசியம் வேண்டும். 

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் அதிகம் உட்கொண்டு வர வேண்டும். அதிலும் ப்ராக்கோலி, பசலைக்கீரை, முட்டைக்கோஸ், இஞ்சி, ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சேரும் நச்சுக்கள் வெளியேறும்.

ஆழ்ந்த தூக்கம்

தூக்கம் ஒரு இயற்கை சிகிச்சை எனலாம். ஏனெனில் நல்ல நிம்மதியான தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் தூங்கும் போது உடல் தானாகவே சுத்தமாவதோடு, உடல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். அதிலும் இரவில் 9-10 மணிக்குள் தூங்க சென்றுவிட வேண்டும். இதனால் காலையில் சீக்கிரம் தூக்கம் கலைந்து எழுந்து நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.

Leave a Reply