shadow

சூர்யா இடத்தை பிடித்த நட்டி நட்ராஜ்

natty-natrajசூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஸ் 3’ படம் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி 23ஆம் தேதிக்கு திடீரென மாற்றப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 16ஆம் தேதியை நட்டி நட்ராஜின் ‘போங்கு’ படம் பிடித்து கொண்டது. ஆம் போங்கு படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 16 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ‘எஸ் 3’ ரிலீஸ் ஆகும் டிசம்பர் 23ஆம் தேதி அமீர்கானின் ‘டங்கல்’ ரிலீஸ் ஆவதால் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ‘எஸ் 3’ படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Leave a Reply