shadow

நட்ராஜ் எம்.எல்.ஏ எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவா?

மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ நட்ராஜ் அவர்களின் ஆதரவு யாருக்கு என்று இதுவரை தெரியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் அணிக்கே எம்.எல்.ஏக்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இதுவரை நடுநிலை வகித்த நட்ராஜ் எம்.எல்.ஏ எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளது பெரும் திருப்பமாக கருதப்படுகிறது.

மேலும் ஓபிஎஸ் அணியில் உள்ள அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு நெருக்கமானவரான நட்ராஜ், அவர் இருக்கும் அணிக்கு எதிரணியில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply