ஸ்ரீதேவி, சங்கராச்சாரியர் மறைவு, கார்த்திக் சிதம்பரம் கைது: பரபரப்பில் தமிழக ஊடகங்கள்

கடந்த மாதங்களாகவே ஊடகங்களுக்கு சரியான தீனி இல்லாத நிலையில் ஒரே வாரத்தில் ஸ்ரீதேவியின் திடீர் மரணம், சங்காரச்சாரியரின் மறைவு, கார்த்திக் சிதம்பரம் கைது என பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே ஒரு ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தமிழக ஊடகங்கள் பிரேக்கிங் செய்திகளில் பிசியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி உலக அளவில் சிரியா போரும் தமிழக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. ஸ்ரீதேவியின் மரணத்தைவிட சிரியா போர் குறித்து அதிக கூகுளில் தமிழர்கள் தேடியுள்ளதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்ததில் இருந்தே அடிக்கடி பிரேக்கிங் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஊடகங்கள் பிரேக்கிங் செய்திகளில் பிசியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *