shadow

வருமான வரித்துறை ரெய்டு எதிரொலி. நத்தம் விஸ்வநாதன் பதவி பறிப்பு

14அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் திடீரென அவரை அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சற்று முன்னர் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ”அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் நத்தம் விஸ்வநாதன் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிட்டது.

Leave a Reply