shadow

நடிகர் சங்க தலைவர் நாசருக்கு டாக்டர் பட்டம். வேல்ஸ் பல்கலை வழங்குகிறது.

Nassarதென்னிந்திய நடிகர் சங்க தலைவரும் பிரபல நடிகருமான நாசருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான விழா வரும் 7ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான ‘கல்யாண அகதிகள்’ என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமான நடிகர் நாசர், அதன் பின்னர் கமல், ரஜினி உள்பட பல படங்களில் குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்தார். ஒருசில படங்களில் கதாநாயகன் வேடங்களிலும் நடித்த நாசர், அவதாரம், தேவதை உள்ளிட்ட ஒருசில படங்களின் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே நாடகத்திலும், அதன் பின்னர் சினிமாவிலும் நடித்துக்கொண்டிருக்கும் நாசர் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருடைய கலைச்சேவையை பாராட்டு தற்போது  வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

மே 7ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள பிரமாண்டமான விழாவில் நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில் வேல்ஸ் பல்கலைகழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி k.கணேஷ் தலைமையேற்று அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக உரையாற்ற, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் .P.S.சவ்ஹான் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்

Leave a Reply