shadow

புளூட்டோவின் சந்திரனை போட்டோ எடுத்த நாசா விண்கலம்
pluto
பூமியில் இருந்து மிக அதிக தூரத்தில் இருக்கும் கிரகம். ஆனால் அந்த கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாசா விண்கலம் ஒன்றை அனுப்பியது. இந்நிலையில் புளூட்டோ கிரகத்துக்கு சாரோன் உள்பட மொத்தம் 5 சந்திரன்கள் உள்ளன. இவற்றில் சாரோன் என்ற சந்திரன் மட்டும் அளவில் மிகப்பெரியது. இதன் புகைப்படங்களை இதுவரை எந்த விண்கலமும் எடுக்காத நிலையில் தற்போது அமெரிக்கா அனுப்பிய விண்கலம் ஒன்றின் மூலம் இந்த சந்திரனின் புகைப்படங்கள் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் நாசா அனுப்பிய ஒரு விண்கலம் சாரோன் உள்பட 5 சந்திரன்களின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அவை நீலம், சிவப்பு, மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ளது.

சாரோன் 1,214 கி.மீட்டர் பரப்பளவை கொண்டது. 0.8. கி.மீட்டர் அளவுள்ள பகுதி இப்போட்டோவில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

மற்றொரு புகைப்படத்தில் பிளவுகள் மற்றும் கணவாய்கள் இருப்பது பதிவாகியுள்ளது. சாரோனில் புளூட்டோவை போன்று பல்வேறு நிறங்கள் இல்லை. வடதுருவத்தில் சிவப்பு நிறம் அதிகமாக உள்ளது.

அங்கு உறைந்த கடல் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக நியூஹொரைசன் குழு உறுப்பினர் பால் சென்ச் கூறியுள்ளார். அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply