shadow

செவ்வாய் கிரகத்துக்கு மேலும் ஒரு செயற்கைக்கோள். தோல்வியில் முடிந்த நாசாவின் முயற்சி
mars
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் செவ்வாய் கிரகத்திற்கு புதிய செயற்கை கோளை அனுப்பவிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைக்கோளை ஏவும் திட்டத்தை ஒருசில மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றிகரமாக ஆய்வுகளை நடத்திவரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, அடுத்தகட்டமாக ‘இன்ஸைட்’ என்ற புதிய செயற்கைக்கோளை வரும் மார்ச் மாதம் 18-ம் தேதி அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த நுண்நோக்கி ஒன்றில் ஏற்பட்ட கசிவை சீர்படுத்தும் பணிகள் தோல்வியில் முடிந்ததால் செயற்கைக்கோளை ஏவும் திட்டத்தை சில மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் இந்த செயற்கைக்கோள் ஏவப்படும் என கூறப்படுகிறது.

இந்த செயற்கைகோளுக்காக இதுவரை அமெரிக்க அரசு 525 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply