shadow

மோடியுடன் போட்டி போடும் கூகுள் சுந்தர்பிச்சை மற்றும் அம்பானி
modi
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ பத்திரிகை வருடந்தோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. இந்நிலையில் இட்ந்ஹ ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கான போட்டியாளர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே, சீன அதிபர் ஜிபிங், ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபு பெக்கர் அல் பாக்தாதி உள்பட  58 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், இவர்களில் யார் சிறந்த மனிதர் என்ற முடிவை அடுத்த மாதம் டைம் பத்திரிகை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டும் சிறந்த மனிதர் பட்டியலில் மோடி பெயர் இருந்தது. ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு மோடி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் ரஷ்ய அதிபர் புதின், கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை, அம்பானி ஆகியோர்களுக்கு நல்ல ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விருது நல்ல விஷயங்களுக்காக மட்டுமின்றி தவறான விஷயங்களுக்காக அதிகம் பேசப்பட்டவரின் பெயரும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்  அபு பெக்கர் அல் பாக்தாதி பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Narendra Modi, Mukesh Ambani, Sundar Pichai among Time Person of the Year contenders

Leave a Reply