shadow

7இந்திய பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பூடான் நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த நரேந்திர மோடிக்கு அங்கு சிறப்பான சிகப்புக்கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இன்று காலை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் ஆகியோர்கள் கிளம்பி, பூடான் தலைநகர் பாரோ சர்வதேச விமானநிலையத்தில் இறங்கினர். பூடான் மன்னர் ஜிக்மி வாங்சக் மற்றும் அரசு அதிகாரிகள் இந்திய பிரதமருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.

சிறுவர் சிறுமியர்களின் மலர்க்கொத்தையும், பூடான் அரசின் ராணுவ மரியாதையையும் ஏற்றுக்கொண்ட பிரதமர், பின்னர் பூடான் நாட்டு தலைவர்களுடன் இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பூடான் பிரதமருடன் தனிமையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்திய பாதுகாப்புக்கு எதிராக எந்த செயல்களையும் பூடான் அரசு மேற்கொள்ளாது என மோடியிடம் பூடான் பிரதமர் உறுதி கூறினார். இந்நிலையில் நாளை பூடான் பாராளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.

Leave a Reply