கடந்த 2003ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நமீதா, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்தார். அஜீத்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனத்தில் வெளிவந்த இளைஞன் படத்திற்கு பின்னர் நமீதாவுக்கு வாய்ப்புகள் குறைந்தது. நமிதாவின் உடல் எடை மிக அதிகமானதால் வாய்ப்புகள் குறைந்து போனதாக கூறப்பட்டது. அதன் பின்னர் உணவுக்கட்டுப்பாடு, இயற்கை மருத்துவ சிகிச்சை , கடும் உடற்பயிற்சி ஆகிய முயற்சிகள் செய்து தற்போது நமீதா 25 கிலோ எடையை குறைத்துவிட்டாராம்
எடை குறைந்தவுடன் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த பட ரிலீஸுக்கு பின்னர் தனக்கு கோலிவுட்டிலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார்.

மேலும் அரசியலில் ஈடுபடவும் அவர் தீவிர முயற்சி செய்து வருகிறார். நமீதாவின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால், அவர் பாரதிய ஜனதாவில் சேருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *