நமது எம்ஜிஆருக்கு போட்டியாக நமது அம்மா: அதிமுக முடிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல துண்டுகளாக உடைந்து தற்போது அதிமுக மற்றும் தினகரன் அணி என்று இரண்டாக செயல்படுகிறது.

இந்த நிலையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான கட்சியே உண்மையான அதிமுக என்றும், இரட்டை இலை மற்றும் கொடி அவர்களுடைய அணிக்கே சொந்தம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் மற்றும் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ஜெயா டிவி ஆகியவை டிடிவி தினகரன் வசமே உள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடாக ‘நமது அம்மா’ நாளிதழ் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் முதல் தொடங்கப்படவுள்ளதாகவும், வெகுவிரைவில் அதிமுகவின் தொலைக்காட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *