shadow

nalandaகடந்த 800 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னியர் படையெடுப்பால் அழிக்கப்பட்ட இந்தியாவின் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் நேற்று திங்கட்கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

பிகார் மாநிலத்தில் உள்ள ராஜகிருஹம் பகுதியில் இயங்கி வந்த இந்தியாவின் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகம், அன்னியர் படையெடுப்புகளின் தாக்குதலுக்கு அழிந்தது. அதன் பின்னர் தற்போதுள்ள பீகார் அரசு எடுத்த முயற்சியின் காரணமாக அந்த பல்கலைக்கழகம் சீரமைக்கப்பட்டு மீண்டும் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் 15 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் மட்டும் முதல் நாளில் வகுப்புக்கு வந்திருந்தனர். முதல் நாளில் சுற்றுச்சூழல், வரலாறு ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டன.  இங்கு தற்போது பணியாற்றும் மொத்தமுள்ள 6 பேராசிரியர்களில் 2 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக 35 நாடுகளை சேர்ந்த 1400 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும், அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்குவதற்கு பெரும் பாடுபட்ட பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோபா சபர்வால் கூறினார்.

Leave a Reply