shadow

chandrababu naiduதமிழக முதல்வர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டேப் வழங்குவதை போல சீமாந்திராவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக ஐபேடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

நேற்று சீமாந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மாநிலத்தின் விவசாய பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “சீமாந்திராவில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் இலவச ஐ–பேடு வழங்கப்படும் என்றும் கூறினார். இதற்காக அரசு சுமார் ரூ.3000 கோடி செலவழிக்க உள்ளது.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த விவசாய பயிர்களை எப்படி விற்பனைக்கு கொண்டு செல்வது? அடுத்ததாக எந்த வகை பயிர்களை பயிரிடுவது? போன்ற அனைத்து விவரங்களும்‘ஐ–பேடு’ சாதனத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மைக்கேற்ப லாபம் தரும் பயிர்களை பயிரிட்டு நல்ல விளைச்சலை பெற்று நன்மை அடையலாம்.

மேலும் இந்த வருடம் முதல் விவசாய நிலங்களை வளம் கொழிக்க செய்ய வைக்க ஜிப்சம் உள்ளிட்ட சத்துக்களை நிலத்திற்கு இடுவதற்காக வருடத்துக்கு ரூ.500 கோடி செலவிட உள்ளோம்” என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

Leave a Reply