அரசியலில் இணையுமா பாட்ஷா ஜோடி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை நக்மா, தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பிரிவின் செயலாளராக உள்ளார். சமீபகாலமாக தமிழக அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ள இவர், தமிழக அரசையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் நக்மா சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும், அரசியல் குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்று கூறப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியில் சேர நக்மா தூதுவிடப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. ‘பாட்ஷா’ படத்தில் இணைந்த இந்த ராசியான ஜோடி, அரசியலிலும் ஒரே கட்சியில் இணையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ஒருபுறம் ரஜினியை அரசியலுக்கு பாஜக தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் காங்கிரசும் முயற்சி செய்து வருவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *