shadow

தளபதி 64 படத்தில் இணைந்த ’கில்லி’ நடிகர்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ திரைப்படத்தில் கில்லி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவர் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கடந்த 2004ஆம் ஆண்டு விஜய், த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் கில்லி. இந்த படம் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் விஜய்யுடன் நடித்த பிரபுதேவாவின் சகோதரரான நாகேந்திர பிரசாத் 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் இணைந்துள்ளார். ஆம் ’தளபதி 64’ படத்தில் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அடுத்தவாரம் கர்நாடகாவில் நடைபெற உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *