சிவாஜிகணேசன் சிலை மற்றம்; நடிகர் சங்கம் செயற்குழு புதிய தீர்மானம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிலையாக அல்ல, ஒவ்வொரு நடிகனின் அசைவிலும் குரலிலும் இன்னமும் தன் தாக்கத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் திரையுலகத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் சொந்தமானவர் கலாச்சார குறியீடாக விளங்குகின்றவர். தன்னோடு மேடையில் பங்கு பெற்ற நாடக நடிகர்களின் நலனுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் எனும் கனவை நனவாக்கியதில் பெரும் பங்காற்றியவர். அன்னாரது சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்த உடனேயே அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை 12.01.2017 அன்று நேரில் சந்தித்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள், சிலையை பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடத்திலோ வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்நிலையில் 3.8.2017 அன்று கடற்கரை சாலையில் இருந்து சிலை அகற்றப்பட்டு ம்ணிமண்டப வளாகத்தில் தமிழக அரசு வைத்துள்ளது. இதுபற்றி இன்று 13.8.2017 நடந்த நடிகர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கபப்ட்டு பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடத்திலோ நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கலின் திரு உருவ சிலையை நிறுவ வேண்டும் என்று வேண்டுகோளை தீர்மனமாக நிறைவேற்றப்பட்டு, இந்த தீர்மானத்தை தமிழக அரசிடம் வேண்டுகோளாக வைத்து கடிதம் கொடுப்பதென நடிகர் அங்கம் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சிலைக்காக சமூக அமைப்புகளும் திரைத்துறையை சார்ந்த பெப்சி இயக்குனர் சங்கம் அனைத்தும் குரல் கொடுத்திருப்பதற்தாக தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *