shadow
வாழும் கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கரை சந்தித்த நடிகர் சங்க பிரதிநிதிகள்
ravishankar
வாழும் கலை என்ற அமைப்பை தொடங்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் பிரபல ஆன்மீகவாதி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தபோது பிரபல அரசியல் தலைவர்கள் அவரை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளும் அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்களில் ஒருவராகிய பொன்வண்ணன், கோவை சரளா, பிரசன்னா உள்பட நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் சென்னையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தங்கியிருந்த இடத்திற்கு நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றவுடன் பல நல்ல விஷயங்கள் நடந்து வரும் நிலையில் ஆன்மீகவாதி ஒருவரின் ஆசியும் கிடைத்துள்ளதால் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் நடிகர் சங்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai Today News: Nadigar Sangam members meet  SriSri Ravishankar

Leave a Reply