shadow

இயக்குனர் பாலாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு


பிரபல இயக்குனர் ‘பாலா’ இயக்கிய ‘தாரை தப்பட்டை’ எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையி தற்போது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கிவிட்டார். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தன.

இந்த படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷூம், முக்கிய வேடம் ஒன்றில் ஜோதிகாவும் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டைட்டிலாக ‘நாச்சியார்’ என்று பாலா தேர்வு செய்துள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *