nsm

 

விஷால், லட்சுமி மேனன் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் வெகுவிமரிசையாக நடந்தது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாலா, ஹரி, சுசீந்திரன், விஜய், மற்றும் பாக்யராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களான விஷால், ,விஷ்ணுவரதன், ஆகியோர்களும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றூம் யூடிவி தனஞ்செயன் ஆகியோர்களும் வந்திருந்தனர். இந்த விழாவில் இரண்டு பாடல்களும் படத்தின் டீஸர்களும் ஒளிபரப்பப்பட்டது.

. இந்த விழாவிற்கு படத்தில் நடித்த மற்ற நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டபோது, படத்தின் நாயகி லட்சுமி மேனன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதனால் விஷாலுக்கும், லட்சுமி மேனனுக்கும் பிரச்சனை என்ற கிசுகிசு படுவேகமாக கோலிவுட்டில் பரவியது.

ஆனால் விஷால் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது லட்சுமி மேனனுக்கு இன்று +2 தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் அவர் தேர்வு எழுதிக்கொண்டிருப்பதால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. கூடிய விரைவில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக லட்சுமி மேனன் வருவார் என்று கூறினார்.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1m2PVPj” standard=”//www.youtube.com/v/kRlmWrD8Spo?fs=1″ vars=”ytid=kRlmWrD8Spo&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3998″ /]

nsm4

nsm5

nsm3

nsm2

nsm1

Leave a Reply