shadow

11214356_478597115652891_8092868108952395341_n

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது. பவுர்ணமி பெண்களை அதிகம் பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன. சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் சொல்லலாம். 16ஆவதாக ஒரு கலை இருக்கின்றது.

அதுதான் சோடேச கலை!

இந்த சோடேச கலையைப் பயன்படுத்திதான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள்….. தங்களுக்கு வேண்டியதை பெற முடிகிறது…!

நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது. அறிந்தது முதல் நிம்மதி, செல்வ வளம், மகிழ்ச்சி, என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார். சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும். திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள். இந்த 16 வது கலையை சித்தர்களும், முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள். அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப் பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

அப்பொழுது, பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் சகல உயிரினங்களும் (பாக்டீரியா, புல், பூண்டு, மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை, புலி, முயல், மான், பாம்பு, நீர்யானை, நட்சத்திர மீன், கணவாய் மீன், கடல்பசு, கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, பூரான், பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை, கழுதை, கோவேறுக்கழுதை, எறும்பு, சுறா மீன்), ஒவ்வொரு மனித மனதும் சூட்சுமமாக அதிரும். அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம். வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரான நிலையைத் தரும்). நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும். வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம். மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை. அமைதியுடன் வடகிழக்கு திசை பார்த்து, கோரிக்கையை (திருமணம், செல்வம் சேர, நோய் தீர, கடன் தீர, எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறு தீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர, வழக்கு வெற்றி….) எதுவானாலும், (ஏதாவது ஒன்று மட்டும்) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும். தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக் கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மனிதராக பிறந்த எவரும் செய்யலாம்.

வாழ்க வளமுடன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *