shadow

mysskin-comes-with-pisasu-700x412

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை அடுத்து மிஷ்மின் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் “பிசாசு”. இந்த படத்தை இயக்குனர் பாலா தனது B ஸ்டுடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார்.

பிசாசுபடத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஒரே நாளில் 10 டியூன்களுக்கும் மேல் போட்டு மிஷ்கினிடம் உனக்கு பிடித்ததை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டாராம் இளையராஜா. இதுகுறித்து மிஷ்கின் பாலாவிடம், “பிசாசு என்ற டைட்டிலுக்கு ஏற்ப உண்மையிலேயே வேலை பார்ப்பவர் இளையராஜாதான். பிசாசு மாதிரி வெறித்தனமாக டியூன் போட்டு கொடுத்துவிட்டார் என கமெண்ட் அடித்தாராம்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருவதாகவும், ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பாலாவின் கோரிக்கையை ஏற்று விஷால் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

Leave a Reply