shadow

ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான வன்முறை – ஐ.நா. உண்மை அறியும் குழு மியான்மருக்குள் நுழைய மறுப்பு

நீண்ட நெடிய வருடங்களாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மர், ஜனநாயக நாடு என்ற அடையாளத்திற்குள் நுழைந்த பின்னரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான வன்முறைகள் குறைந்தப் பாடில்லை. அம்மக்களைக் கூண்டோடு அழிக்கும் இனப்படுகொலை முயற்சியில் மியான்மர் அரசாங்கம் ஈடுபடுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை மட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐ.நா.வின் உண்மைக் கண்டறியும் பணித் தொடர்பாக எவரேனும் அனுப்பப்பட்டால், அவர்கள் மியான்மருக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என மியான்மர் வெளிவிவகார அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் கியாவ் ஜியா தெரிவித்துள்ளார். ரோஹிங்கியா முஸ்லீம்கள் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக மியான்மரில் குடியேறியவர்கள் என குறிப்பிடும் மியான்மர் அரசு அவர்களுக்கு குடியுரிமை அளிக்கவும் மறுத்து வருகிறது.

ரோஹிங்கியா கிளிர்ச்சியாளர்களால் ஒன்பது காவல்துறையினர் கொல்லப்பட்டதாகக் காரணம் காட்டி, ரோஹிங்கியா கிராமங்களுக்குள் நுழைந்த மியான்மர் ராணுவம், பெரும் வன்முறைகளை கூட்டு பாலியல் வன்புணர்வுக, கொலைகள் உள்ளிட்டவற்றை நிகழ்த்திய குற்றச்சாட்டிற்கு உள்ளானது.

Leave a Reply