shadow

மியான்மர் தேர்தல்: ஆங் சாங் சூகி அவர்களின் என்.எல்.டி கட்சி அபார வெற்றி
myanmar
மியான்மர் நாட்டின் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே வெளிவந்துள்ளது. ஆம் மியான்மர் நாட்டின் மக்களுக்காக பல வருடங்கள் சிறையில் வாடிய ஆங் சாங் சூகி அவர்களின் என்.எல்.டி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

தேர்தல் முடிவு குறித்து ஆளும் ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி) கட்சித் தலைவர் ஹதே ஊ, கூறியபோது,  “நாங்கள் தோல்வியை தழுவிவிட்டோம். எனது சொந்த தொகுதியான ஹின்தாடாவிலும் தோல்வி ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. எனது சொந்த தொகுதி மக்களுக்காக நிறைய நலத்திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறேன். இருந்தும் மக்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் இத்தகைய தோல்வியைச்  சந்தித்தது ஏன் என்று இனிமேல்தான் ஆய்வு செய்வோம்” என்றார்.

ஏற்கனவே கடந்த 1990-ல் நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்.எல்.டி கட்சி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிவை ராணுவம் ஏற்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சர்வதேச நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக கடந்த 2010-ல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதில், ராணுவ ஆதரவு பெற்ற கட்சியான யுஎஸ்டிபி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் மியான்மரில் நடந்த இந்தத் தேர்தலில் மீண்டும் ஆங் சாங் சூகி அவர்களின் என்.எல்.டி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

Leave a Reply