shadow

தேர்தலில் வெற்றி பெற்றால் அதிபரை நானே நியமனம் செய்வேன். ஆங் சாங் சூ சி
myanmar
கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிப்படையாக தேர்தல் இப்போதுதான் நடைபெறுவதாக கூறப்படும் மியான்மர் நாட்டில், தனது கட்சி  தேர்தலில் வெற்றிபெற்றால், அரசாங்கத்துக்கு தானே தலைமை தாங்கப் போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ சி தெரிவித்துள்ளார்.

யங்கூனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நேற்று பேசிய ஆங் சாங் சூ சி, “தேர்தலில் வெற்றி பெற்றால் நானே அரசாங்கத்துக்கு தலைமை தாங்கப் போகிறேன். மியான்மர் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாக பணியாற்றக் கூடிய ஒருவரை நானே அதிபராக நியமனம் செய்வேன்’ என்று கூறியுள்ளார்.

ஆங் சாங் சூ சி தெரிவித்த இந்த கருத்துக்கள் அந்நாட்டின் ராணுவத்திற்கு நேரடி சவாலாக  அமைந்துள்ளதாகவும் அரசியலமைப்புக்கு முரணானதாக அவை பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மியான்மரில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply