shadow

‘பனாமா பேப்பர்ஸ்’ விவகாரம். அமிதாப்பச்சன் விளக்கம்

amitabஉலகம் முழுவதிலும் உள்ள விவிஐபிக்களை சமீபத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விஷயம் ‘பனாமா பேப்பர்ஸ்’. இந்த ஊடகம் வெளிப்படுத்திய பனாமா நட்டின் வங்கிக்கணக்கால் ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரே பதவியிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறப்படும் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யாராய் ஆகியோர்களின் பெயர்களும் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமிதாப்பச்சன் இதுகுறித்து தனது மறுப்பை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு நிறுவனத்தையும் எனக்குத் தெரியாது. சீ பல்க் ஷிப்பிங் நிறுவனம், லேடி ஷிப்பிங் லிட், ட்ரெஷர் ஷிப்பிங் லிட், மற்றும் டிராம்ப் ஷிப்பிங் லிட்., ஆகிய நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எதிலும் நான் இயக்குநராக இருந்ததில்லை. என்னுடைய பெயர் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்க சாத்தியமுள்ளது.

நான் வரிகளை ஒழுங்காகச் செலுத்தியுள்ளேன், அயல்நாடுகளில் செலவழித்த தொகைக்கும் நான் வரி செலுத்தியே வந்துள்ளேன். தாராள பணம் அனுப்புதல் திட்டம் உட்பட அயல்நாட்டுக்கு நான் அனுப்பிய தொகைகள் அனைத்தும் சட்டபூர்வமானது, இதற்கு வரியையும் செலுத்தியுள்ளேன்.

எது எப்படியிருந்தாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி அறிக்கையிலும் கூட என் பக்கத்தில் சட்டவிரோத நடவடிக்கை இருந்ததாக கூறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Chennai Today News: My Name Misused in Panama papers.Amitab

Leave a Reply