shadow

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு உதவியது உண்மைதான். முன்னாள் அதிபர் முஷரப் ஒப்புதல்

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மறைமுகமாக உதவி செய்து கொண்டிருக்கின்றது என்று இந்திய அரசு பல ஆண்டுகளாக குற்றம் சுமத்தி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில்  காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு தனது ஆட்சி காலத்தில் பல்வேறு உதவிகளை வழங்கியது உண்மைதான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் ஒப்புக்கொண்டுள்ளார்.

முஷ்ரப் கடந்த 2001 முதல் 2008ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். இவரது ஆட்சி காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் பிரச்சனை உச்சத்தில் இருந்தது. ஆரம்பத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பலவிதங்களில் உதவி செய்தது உண்மைதான். ஆனால் பின்னர் இப்பிரச்சனை அரசியல் மூலம் தீர்க்கப்பட வேண்டியதை அறிந்து கொண்டு உதவியை நிறுத்தியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தற்போது முஷரப் துபாயில் உள்ளார். இவர் மீது பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கு, தேசத்துரோக வழக்கு என பல கிரிமினல் வழக்குகள் பாகிஸ்தான் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply