முதல்வர் பதவி எனக்கு வேண்டாம். பிரதமர் பதவிதான் எனது கனவு. சரத்குமார் காமெடி
sarathkumar
கடந்த நான்கரை ஆண்டு காலமாக அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமாரின் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகி தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய பலர் சரத்குமார் தமிழக முதல்வராக வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் இறுதியில் பேசிய சரத்குமார், “தற்போது இயக்கத்தை வளர்ச்சி காண வைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இயக்கம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். நமது வாக்கு வங்கியை காண்பிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருக்கிறோம். கட்சி சின்னம் விரைவில் அறிமுக்கபடுத்தப்படும். என்னை அனைவரும் முதல்வர் ஆகுங்கள் என்று வற்புறுத்துகின்றனர். ஆனால் எனக்கு முதல்வர் ஆவதை விட பிரதமர் ஆவதுதான் கனவு ‘ என்று கூறினார்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் வென்ற சரத்குமார் முதல்வர் பதவியை விட பிரதமர் பதவிதான் தனது கனவு என்று கூறியுள்ளது அனைவரின் நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது. சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் சரத்குமாரை பலர் கிண்டலடித்து வருகின்றனர்.

Chennai Today News: My dream is only PM post said Sarathkumar

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *