shadow

images (3)

தேவையான பொருட்கள்

மட்டன் – ½ கிலோ

தேங்காய் பால் – 1 கப்

பட்டை – 2

கிராம்பு – 3

ஏலக்காய் – 3

கல்பாசி – 1

சோம்பு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

பொட்டுக் கடலை – 50 கிராம்

கொத்துமல்லி – 1 கொத்து

சிறிய வெங்காயம் – 100 கி

பெரிய வெங்காயம் – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 ½ டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மல்லித்தூள் – 2 ½ மல்லித்தூள் –

தக்காளி – 2

தேங்காய் எண்ணை – 2 டீஸ்பூன்

கசகசா – 100 கி

சீரகம் – 1 டீஸ்பூன்

முந்திரி – 100 கிராம்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

ஆட்டு இறைச்சியுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது ¼ டீஸ்பூன் மிளகாய்த் தூள் போட்டு வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

முந்திரி பருப்பை சுடுதண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் பட்டை, சோம்பு, கசகசா, சீரகம் இவை அனைத்தும் சிறிதளவு போட்டு, பொட்டுக்கடலையும் அதில் சேர்த்து வறுத்தபின் அரைத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணை விட்டு பட்டை, கிராம்பு, கல்பாசி, சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போன பின்பு தக்காளி மற்றும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு கொதிநிலை வந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்த மற்றும் தயார் நிலையில் வைத்துள்ள ஆட்டிறைச்சியை சேர்த்து ஒரு கொதிநிலை வந்தவுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் தேங்காய் பால் ஊற்றி, பத்து நிமிடங்கள் கழித்து மல்லித்தழையை தூவி பறிமாறவும்.

குறிப்பு

இடியாப்பம், சப்பாத்தி, பூரி, இட்லி மற்றும் சாதத்துக்கும் இணை உணவாகப் பரிமாறலாம்.

 

Leave a Reply