shadow

hqdefault-350x250

தேவையான பொருட்கள் : 
 
மட்டன் 15 கிராம் (துண்டுகளாக)
எண்ணெய் 15 கிராம்
வெங்காயம் 2
பூண்டு 6 அல்லது 7 பல்
கிராம்பு 2 அல்லது 3 (தூள் செய்தது)
மஞ்சள் 2 துண்டு
சோம்பு கொஞ்சம்
இஞ்சி ஒரு துண்டு
சிவப்பு மிளகாய் 2 அல்லது 3
உப்பு தேவைக்கேற்ப
புளி 10 கிராம்
 
செய்முறை : 
 
முதலில் மட்டனை துண்டாக்கி நன்கு சுத்தம் செய்யவும். பின்னர் மிளகாய், இஞ்சி, சோம்பு, பாதி வெங்காயம் மற்றும் மஞ்சள் முதலியவைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 
மேலும் எண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு, கிராம்புத் தூள் போட்டு வதக்கவும். வதங்கிய வெங்காயத்தில், மட்டன் துண்டுகள் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, குறைந்த தீயில், மூடி, 1/2 மணிநேரம் வேக வைக்கவும்.
 
பின் வெந்நீர், உப்பு சேர்த்து மட்டன் மிருதுவாகும் வரை வேக வைக்கவும். மட்டன் வெந்தவுடன், கூழாக கரைத்த புளியை விட்டு சில நிமிடம் வதக்கவும். சிறிய தீயில் வைத்து நன்கு வறுபட்டவுடன் இறக்கி பரிமாறவும்.

Leave a Reply