shadow

ஒரே நாளில் பிளாட்பாரத்திற்கு வந்த கோடீஸ்வரர்கள்: லண்டன் தீவிபத்தால் ஏற்பட்ட விபரீதம்

நேற்று லண்டனில் உள்ள 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் மட்டுமே உயிரிழந்திருந்தாலும், அந்த கட்டிடத்தில் உள்ள 120 வீடுகளும் அதில் இருந்த கோடிக்கணக்கான பொருட்களும் சாம்பலாகிவிட்டன.

அந்த குடியிருப்பில் இருந்து உயிரை காப்பாற்றி தப்பித்து வந்த குடியிருப்புவாசிகள் உயிரை மட்டுமே தற்போது சொந்தமாக வைத்துள்ளனர். மாற்றுத்துணி கூட இல்லாமலும் தங்குவதற்கு இடமும் இல்லாமலும் அவர்கள் நேற்றிரவு பிளாட்பாரத்தில் தங்கியது காண்போர் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

மேலும் தங்களுடைய பொருள், பணம், வங்கி அட்டைகள், நகைகள் உள்பட அனைத்துமே தீயில் எரிந்து நாசமாகிவிட்டதால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் தங்குவதற்கு இடம் இல்லாமலும் பரிதாபமாக உள்ளனர். இவர்கள் பலர் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விபத்தில் பெரும்பாலானோர் உயிர் பிழைக்க அந்த குடியிருப்பில் வாழும் முஸ்லீம்கள் என்று கூறப்படுகிறது. ரம்ஜான் நோன்பிருந்த முஸ்லீம் குடும்பத்தினர் தான் முதலில் இந்த தீவிபத்தை கண்டுபிடித்ததாகவும் உடனடியாக அருகில் உள்ள வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பியதோடு, அலாரத்தை அடித்து அனைவரும் வெளியேற உதவியதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply