shadow

vijay and simbudevaவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “கத்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருப்பதால் விஜய்யின் அடுத்த படத்தினை இயக்கும் சிம்புதேவன், விறுவிறுப்பாக விஜய்யின் அடுத்த படவேலைகளை கவனித்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் படத்தின் இசையமைப்பாளரை தேர்வு செய்தில் கடந்த ஒருவாரமாக தீவிர ஆலோசனையில் இருந்தார். இந்நிலையில் சிம்புதேவன் -விஜய் இணையும் புதிய படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைமைப்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் ஏற்கனவே விஜய் நடித்த “சச்சின்” மற்றும் “வில்லு” ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனவை என்பதால் இந்த படத்தின் பாடல்களும் கண்டிப்பாக ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என இயக்குனர் சிம்புதேவன் கூறியுள்ளார்.

Leave a Reply