shadow

rajivமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று சுப்ரீம் கோர்ட் சற்று முன்னர் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக குறைத்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போதை காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசு, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ரஞ்சன் கோகேய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் பேரறிவாளன் உள்பட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று கூறிய நீதிபதிகள், மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பால்  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் மரண தண்டனையில் இருந்து தப்பித்துள்ளனர்.
 

Leave a Reply