shadow

Mundasupatti-Tamil-Movie-Photostills-Gallery-33_S_21415 நிமிடங்கள் மட்டும் ஓடி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ஒரு குறும்படத்தை இரண்டரை மணி நேர படமாக காமெடி கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்குமார். அவருடைய முயற்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

போட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்ற மூடநம்பிக்கையுள்ள கிராமம்தான் முண்டாசுப்பட்டி. இந்த கிராமத்தின் ஊர்த்தலைவர் இறக்கும் தருவாயில் இருக்க, அவர் இறந்தவுடன் போட்டோ எடுக்க அழைத்து வரப்படுகிறார் விஷ்ணு.

இந்நிலையில் மரணப்படுக்கையில் இருக்கும் ஊர்த்தலைவரின் பேத்தி நந்திதாவை காதல் செய்கிறார் விஷ்ணு. இந்த தருணத்தில் ஊர்த்தலைவர் இறந்துவிடவே, அவரை புகைப்படம் எடுக்கிறார். ஆனால் அந்த புகைப்படம் பிரிண்ட் போட்டு பார்க்கும்போதுதான் தெரிகிறது, அதில் பெரியவருக்கு பதிலாக நந்திதா மட்டுமே இருக்கிறார் என்று. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க பெரியவர் போலவே இருக்கும் ஒருவரை புகைபடம் எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து சமாளிக்கிறார் விஷ்ணு.

இந்நிலையில் ஊர்த்தலைவர் போலவே இருந்தவர் நந்திதாவின் சித்தப்பா என தெரியவருகிறது. அதன்பிறகு ஏற்படும் காமெடி கலாட்டாதான் படம் முழுக்க வருகிறது. இன்னொரு கிளைக்கதையாக பிளாஷ்பேக்கில் முண்டாசுப்பட்டி கிராமத்தில் ஒரு எரிகல் விழுவதும் அதை ஒரு வெள்ளைக்காரன் ஆய்வு செய்வதும், அந்த எரிகல்லை ஊர்மக்கள் தெய்வமாக வழிபட்டு வரும் வேளையில் அதை கைப்பற்ற வெள்ளைக்காரன் செய்யும் சதியும் படத்துடன் ஒட்டாமல் வருகிறது.

மிகச்சிறந்த காமெடி படமாக இருந்திருக்கவேண்டிய இந்த படம் இடையில் தேவையில்லாத பிளாஷ்பேக் காட்சிகளால் வெறுப்பேற்றுகிறது. நந்திதா, விஷ்ணு காதல் காட்சிகளிலும் சரியான அழுத்தம் இல்லை. இருப்பினும் கடைசி அரைமணி நேரம் நடக்கும் காமெடி கலாட்டாவில் அனைத்து குறைகளும் மறந்துவிடுகின்றது.

விஷ்ணுவின் நடிப்பில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. அவருடைய கெட்டப்  அப்படியே 1980 காலகட்டத்தை நினைவுபடுத்துகிறது. நந்திதாவின் கண்களே பல நேரங்களில் நடிக்கின்றன. கோலிவுட்டில் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அருமையாக அமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். ஒருசில குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் இந்த காமெடி கலாட்டாவை கண்டிப்பாக ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1ncQ93s” standard=”//www.youtube.com/v/NjwnL6jrtuw?fs=1″ vars=”ytid=NjwnL6jrtuw&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7622″ /]

Leave a Reply