ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: இறுதி போட்டிக்கு மும்பை தகுதி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கிளைமாக்ஸ் ஒருவழியாக வந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடந்து வரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் புனே அணியுடன் மும்பை அணி மோதுகிறது.

புனே அணியுடன் இறுதி போட்டியில் மோதும் அணி எது என்பதை முடிவு செய்யும் முக்கிய பிளே ஆப் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது. இந்த போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணி மோதியது. ஆனால் கொல்கத்தா அணி முற்றிலும் மும்பையிடம் சரண் அடைந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் வெளியேறியது

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 108 என்ற எளிய இலக்கை விரட்டிய மும்பை 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய மும்பை அணியின் கே.வி.சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் போட்டியின் இறுதிபோட்டி நாளை ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *